KRISHNA JANMASHTAMI: ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் வழிபடுவது எப்படி? எந்த நேரத்தில் வழிபடலாம்?
KRISHNA JANMASHTAMI: ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் வழிபடுவது எப்படி? எந்த நேரத்தில் வழிபடலாம்? எப்படி வழிபட்டால் கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
KRISHNA JANMASHTAMI: நடப்பு 2024ஆம் ஆண்டு, கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஒரு நல்ல தற்செயல் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் மிகவும் சுப நேரத்தில் வழிபட்டு கிருஷ்ணரின் விசேஷ அருளைப் பெறலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த நாளில், சந்திரன் ரிஷப ராசியில் இருக்கும் என்று ஜோதிடர் அஞ்சனி குமார் தாக்கூர் கூறினார். ஏனெனில் கிருஷ்ணர் பிறந்த நேரத்தில் சந்திரன் ரிஷப ராசியில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அஷ்டமி திதி வரும், அதே இரவில் ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரம் மற்றும் சந்திரன் இருப்பது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கிருஷ்ண ஜென்மாஷ்டமி திங்கள்கிழமை வந்தால், அது மிகவும் அற்புதமான யோகத்தை உருவாக்குகிறது. இது ஜெயந்தி யோகா என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள் புதன்கிழமை ஆகும்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டயில் வழிபட உற்ற நேரம்:
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நேரத்தில் நாம் எந்த நேரத்திலும் வழிபடலாம் என்று ஜோதிடர் கூறினார். ஆனால், இந்த நாளில் வழிபாட்டிற்கு மூன்று மிகவும் புனிதமான நேரங்கள் உள்ளன. கிருஷ்ண ஜென்மாஷ்டமியில் வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதன்படி, காலை 5.56 மணி முதல் 7.37 மணிக்குள், வழிபடுவது சிறந்தது என நேரம் சொல்கிறது.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கான சடங்குகள்:
கிருஷ்ண ஜென்மாஷ்டமியில் அதிகாலையில் எழுந்து குளிப்பது நல்லது. அதன்பின், வீட்டில் இருக்கும் பூஜை அறையினை சுத்தம் செய்யுங்கள். பின்னர், பூஜையறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.
அனைத்து தெய்வங்களுக்கும் ஜலாபிஷேகம் செய்யுங்கள். பகவான் கிருஷ்ணரின் குழந்தை வடிவமான, கிருஷ்ணரை இந்த நாளில் வழிபடுங்கள். அதன் முன்னோட்டமாக, பகவான் கிருஷ்ணரின் சிலைக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள். அதன்பின், கிருஷ்ணர் சிலையை ஊஞ்சலில் அமர வைத்து, ஊஞ்சல் ஆட்டுங்கள்.
உங்கள் விருப்பப்படி, பகவான் கிருஷ்ணருக்கு சாத்வீக விஷயங்கள் மட்டுமே படைக்கப்படுவது நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பகவான் கிருஷ்ணருக்கு மகனுக்குப் பரிமாறுவதைப் போல, உணவுகளைப் பரிமாறுங்கள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இரவில் பிறந்ததால் இந்த நாளில் இரவு வழிபாடும் முக்கியமானது. இரவில் கிருஷ்ணரை விசேஷமாகவும் வழிபாடு செய்யுங்கள்.
மேலும், பகவான் குட்டி கிருஷ்ணருக்கு கற்கண்டு, நட்ஸ்கள் ஆகியவற்றைப் பரிமாறி, ஆரத்தி எடுங்கள். இந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரை முடிந்தவரை மனமுருக கவனித்து வழிபடுங்கள். மேலும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளைப் பரிமாறவும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்