Shiva Temple: ராமர் உருவாக்கிய அதிசய வெந்நீர் ஊற்று!
மும்பையில் அமைந்துள்ள சிவபெருமான் கோயிலில் ராமர் உருவாக்கிய வெந்நீர் ஊற்றுகள் குறித்து இங்கே காண்போம்.
ராமாயணத்தில் ராமர், சீதா, லட்சுமணன் மூன்று பேரும் வனவாசம் சென்ற போது பல இடங்களைக் கடந்து சென்றுள்ளனர். அவர்கள் நடந்து சென்ற இடம் முதல் ஓய்வெடுத்த இடம் வரை அனைத்தும் பல புராணங்களையும் சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
மும்பை அருகே கணேஷ் புரி பகுதியை அடுத்த அக்லோலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற சிவபெருமான் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் ராமர் வனவாசம் இருந்த சமயத்தில் ராமன், சீதா மற்றும் லட்சுமணன் ஆகியோர் குளித்த இடம் எனும் புராணம் கூறுகிறது.
இந்த இடத்திற்கு மூவரும் வந்த பொழுது அது குளிர்காலம் என்பதால் தனது மனைவியும் மற்றும் தம்பியும் பயன்படுத்துவதற்காக வெந்நீர் ஊற்றுகள் மூன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஊற்றுக்களையும் ராமர் அம்பு எய்தி உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஊற்றுகள் பூமிக்கு அடியில் உள்ள பாறை குளம்பிலிருந்து வெளியாகும் நீரே வெந்நீராக மேலே வருகிறது எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெந்நீர் ஊற்றுக்களிலிருந்து வெளியாகும் நீரில் பக்தர்கள் குளித்துவிட்டு நேரடியாகச் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர். இந்த தண்ணீரில் குளித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகமாக உள்ளது.
டாபிக்ஸ்