Jupiter - Mars conjunction: ஜோடி சேரும் குரு - செவ்வாய்: அரசு வேலையில் அப்பாயின்மென்ட் பெறப்போகும் ராசிகள்!
Jupiter - Mars conjunction: ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியலாம். ஜோடி சேரும் குரு - செவ்வாய்யால் அரசு வேலையில் அப்பாயின்மென்ட் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
Jupiter - Mars conjunction: செவ்வாய் பகவான் சமீபத்தில் ராசியை மாற்றியுள்ளார். ஜூலை 12ஆம் தேதி, மேஷத்திலிருந்து செவ்வாய் பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் அமர்ந்திருக்கிறார். அதே நேரத்தில், குரு ஏற்கனவே ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். மேலும் ஆண்டு முழுவதும் இந்த ராசியில் குரு பகவான் பயணம் செய்வார்.
ரிஷப ராசியில் குடியேறிய குரு மற்றும் செவ்வாய்:
செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் மாறியவுடன், ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகிறது. ஆகஸ்ட் 25ஆம் வரை நீடிக்கும் செவ்வாய்-குருவின் சேர்க்கை பலருக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ரிஷப ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது என்று நம்பப்படுகிறது.
செவ்வாய் ராசியில் ஆட்சி புரிந்தால் கிட்டும் நன்மைகள்:
செவ்வாய் ஆட்சிபுரியும்போது ஒருவருக்கு உடல் பலம் அதிகரிக்கும். புகழ் அதிகரிக்கும். தைரியம் கூடும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் வாய்க்கும். அரசின் சீருடைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை கூடும்.
குரு பகவான் ராசியில் ஆளுமைச் செலுத்தும்போது கிடைக்கும் நன்மைகள்:
தேவர்களுக்கு குரு ஆனவர் குரு பகவான். நேர்மையான வழியில் உதவும் குணம். குரு பகவானின் ஆட்சியின்போது நேர்வழியில் இருப்பவர் அரசு அதிகார பணியைப் பெறலாம்.
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் பெரிதும் பயனடையப்போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
சிம்மம்:
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் முதலாளியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நெருக்கடி சிம்ம ராசியினருக்கு நீங்கும். நீங்கள் புதிய முதலீட்டு விருப்பங்கள் பற்றி யோசிக்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.
கடகம்:
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் கடக ராசியினருக்கு நன்மை பயக்கும். பணியில் இருப்பவர்கள் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைப்பது உறுதி. சிறிய பிரச்னைகள் இருக்கலாம். அவை உங்கள் துணையின் ஆதரவுடன் எளிதில் தீர்க்கப்படலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக அச்சமின்றி இருக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி உங்கள் கால்களை முத்தமிடும்.
ரிஷபம்:
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை ரிஷப ராசியினருக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் குருவின் சுப சேர்க்கையால், உங்கள் தடைபட்ட அனைத்து வேலைகளும் தொடங்கும். எந்தவொரு புதிய வேலையின் தொடக்கத்திற்கும் இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சுகமும் செல்வமும் கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்