தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscopes Chasing Enemies In March

March: மார்ச் மாதத்தில் எதிரிகளை துரத்தியடிக்கும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 04, 2024 11:57 AM IST

- மார்ச் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மார்ச் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
மார்ச் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஷபம்: இந்த ராசியினரருக்கு வியாபாரம் செய்தால், மார்ச் மாதத்தில் நிகர லாபம் அதிகமாகவே கிடைக்கும். வாழ்வில் பாஸிட்டிவான நகர்வுகளை நிறைய செய்வீர்கள். புதிய வருவாய் கிடைப்பதால், நிதி நிலைமை வலுவாகும்.

கடகம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பண ஆதாயம் கிடைக்கும். போட்டித்தேர்வுக்கு பயின்றால் வெற்றிதான். வங்கியில் உங்கள் இருப்புத்தொகை அதிகரிக்கும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய தொழில், புதிய வேலையில் வெல்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதி, திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்கும். வெகுநாட்களாக நடக்காமல் இழுத்தடித்த பணிகளை முடிப்பீர்கள்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு வீட்டில் நீண்ட நாட்களாக மனக்குழப்பம் இம்மாதத்தில் மறையும். கருத்துவேறுபாடுகள் குறையும். சண்டை - சச்சரவால் பிரிந்து இருக்கும் கணவன் - மனைவி இடையே மீண்டும் சேர தூது வரும். முடிவுகள் சாதகமாகும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்