Today Horoscope: நிதானம் தேவை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (நவம்பர் 21) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும்.
ரிஷபம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சுயதொழிலில் லாபகரமான சூழல் உண்டாகும்.
மிதுனம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோக ரீதியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிர்க்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் சாதகமாகும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.
கன்னி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். நண்பர்களின் உதவி திருப்தியை ஏற்படுத்தும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
தேவையற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு ஏற்ப மதிப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் குறையும். .
விருச்சிகம்
புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நுட்பமான சில விஷயங்களை அறிவீர்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவது நல்லது.
தனுசு
குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் மனமறிந்து நடந்து கொள்ளவும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்
உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.
மீனம்
எதிர்பாராத வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடனிருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியிடங்களில் பொறுமையைக் கையாளவும்.
டாபிக்ஸ்