தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (30.05.2024): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகும்..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (30.05.2024): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகும்..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 30, 2024 05:43 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 30) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (30.05.2024): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகும்..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (30.05.2024): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகும்..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபம் உண்டாகும். குழந்தைகளால் சிறு சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.

ரிஷபம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். 

மிதுனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த மந்த தன்மை படிப்படியாக குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செயல்களை செய்வது நல்லது. வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வாகன மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான சில முடிவுகள் பிறக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

துலாம்

நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பணி நிமித்தமான புதிய இலக்குகள் பிறக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

தாய் பற்றிய எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். உழைப்பு மேம்படும்.

தனுசு

குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். மனதில் புதுவிதமான வியூகங்கள் உண்டாகும். தடைபட்டு வந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். 

மகரம்

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியங்கள் எளிதில் நிறைவடையும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்

புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

மீனம்

வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனை ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதார சிக்கல் குறையும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு பிறக்கும். தொல்லை விலகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்