தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (28.05.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (28.05.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
May 28, 2024 05:00 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 28) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (28.05.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (28.05.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். நீண்ட தூர பயணம் செய்வதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும்.

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் நட்புக்களால் உற்சாகம் ஏற்படும்.

மிதுனம்

அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் பயண வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும்.

கன்னி

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். கலை பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.

துலாம்

வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சொத்து விற்பது, வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனை கிடைக்கும். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.

தனுசு

தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும்.

மகரம்

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். துணைவர் இடத்தில் பொறுமை வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும்.

கும்பம்

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் விஷயங்களில் விவேகம் வேண்டும்.

மீனம்

வெளி வட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு எண்ணம் மேம்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்