தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (27.05.2024): பண யோகம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (27.05.2024): பண யோகம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 27, 2024 05:50 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 27) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (27.05.2024):பண யோகம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (27.05.2024):பண யோகம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தம் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

நெருக்கமானவர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வேலை ஆட்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களால் உற்சாகம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

கடகம்

மனதளவில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.

சிம்மம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் தனித்திறமை வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.

கன்னி

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். அரசு வழியிலான செயல்களில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். அலுவலகத்தில் 

துலாம்

உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். வியாபார நெருக்கடிகள் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனம் மாற்ற எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். இறை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். சில மாற்றங்கள் பிறக்கும்.

தனுசு

சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

மகரம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். கருத்துகளை பகிர்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடனிருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பணி நிமித்தமான செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

கும்பம்

உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். வியாபார விருத்திக்கான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த தொழிலில் லாபம் அடைவீர்கள். தனவரவுகள் தேவைக்கு இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்