தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (25.05.2024): 'எதிர்பார்த்தது நடக்கும் .. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (25.05.2024): 'எதிர்பார்த்தது நடக்கும் .. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 25, 2024 05:00 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 25) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (25.05.2024): 'எதிர்பார்த்தது நடக்கும் .. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (25.05.2024): 'எதிர்பார்த்தது நடக்கும் .. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நினைத்த பணிகள் சாதகமாக அமையும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்

வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும்.

மிதுனம்

நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்போர்க்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர்வு ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

கடகம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பத்திரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சகோதரிகளின் வழியில் சில காரியங்கள் சுமூகமாக முடியும்.

சிம்மம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செய்லபடவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களின் உதவியால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கன்னி

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். உறவினர்களின் வழியில் விரயங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

துலாம்

மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த வருத்தம் நீங்கும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் தெளிவு பிறக்கும். வியாபாரங்களில் எதிர்பார்த்தபடி லாபம் உண்டாகும்.

தனுசு

குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக முடியும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணியாளர்களிடத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

மகரம்

மனதளவில் தேவையற்ற குழப்பம் தோன்றி மறையும். உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். சகப் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும்.

கும்பம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும்.

மீனம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப விஷயங்களில் பொறுமை வேண்டும். பணி சார்ந்த திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களால் திடீர் விரயங்கள் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்