தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (24.05.2024):'சோதனை மறையும்.. நன்மை உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (24.05.2024):'சோதனை மறையும்.. நன்மை உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
May 24, 2024 05:00 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (மே 24) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (24.05.2024):'சோதனை மறையும்.. நன்மை உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (24.05.2024):'சோதனை மறையும்.. நன்மை உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

நண்பர்களிடத்தில் தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே இன்று சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள்.

மிதுனம்

நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். 

கடகம்

ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சிந்தனை மேம்படும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

கன்னி

வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நன்மை கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை ஓரளவு குறையும். நெருக்கடியான சூழல் மாறும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சோதனை மறையும்.

விருச்சிகம்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

தனுசு

அலுவல பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சுப காரிய பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

மகரம்

சேமிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.

கும்பம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மனதில் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். மாற்றம் பிறக்கும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் தெளிவுகளும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்