Today Rasipalan (20.05.2024): 'திடீர் யோகம்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (20.05.2024): 'திடீர் யோகம்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (20.05.2024): 'திடீர் யோகம்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Published May 20, 2024 05:39 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 20) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (20.05.2024): 'திடீர் யோகம்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (20.05.2024): 'திடீர் யோகம்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் சாதகமாக முடியும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பழைய சிக்கல்கள் குறையும்.

ரிஷபம்

நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

மிதுனம்

வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும்.

கடகம்

சொத்து பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். சோதனையான நாள்.

சிம்மம்

சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திகான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள்.

கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பம் ஏற்படும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.

துலாம்

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும்.

விருச்சிகம்

புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளின் வழியில் சாதகமான சூழல் அமையும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கவனம் வேண்டும்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியம் நடக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

மகரம்

நிர்வாகத் துறையில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும்.

கும்பம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் அவசரமின்றி செயல்படவும். சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்