தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (17.05.2024): நினைத்தது எல்லாம் நடக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (17.05.2024): நினைத்தது எல்லாம் நடக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 17, 2024 05:40 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 17) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (17.05.2024): நினைத்தது எல்லாம் நடக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (17.05.2024): நினைத்தது எல்லாம் நடக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும்.

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

மிதுனம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும்.

கடகம்

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.

சிம்மம்

அடுத்தவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி

விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

துலாம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும்.

விருச்சிகம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் மறையும்.

தனுசு

எதிலும் கவனம் தேவை. இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று யோசித்து செயல்படவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் காணப்படும்.

கும்பம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும். 

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பகை மறையும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்