Today Rasipalan (15.05.2024): யாருக்கு எதிர்பாராத செலவு?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (15.05.2024): யாருக்கு எதிர்பாராத செலவு?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (15.05.2024): யாருக்கு எதிர்பாராத செலவு?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 15, 2024 05:32 AM IST

Today Horoscope, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 15) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (15.05.2024): யாருக்கு எதிர்பாராத செலவு?..மேஷம் முதல் மீனம் வரை 12.. ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (15.05.2024): யாருக்கு எதிர்பாராத செலவு?..மேஷம் முதல் மீனம் வரை 12.. ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களால் ஆதாயம் அடைவீர்கள்.

மிதுனம்

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஆதாயம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்தவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நற்செயல் நிறைந்த நாள்.

சிம்மம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

கன்னி

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

துலாம்

எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மருத்துவத் துறையில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

விருச்சிகம்

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டுச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

மகரம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

மீனம்

தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். நண்பர்களின் வழியில் புரிதல் அதிகரிக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்