Today Rasipalan (11.05.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? - இன்றைய ராசிபலன் இதோ..!
Today Rasipalan, Horoscope Today: ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குழப்பம் விலகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும்.
மிதுனம்
தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும்.
கடகம்
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிமை சார்ந்த செயல்களில் மனம் லயிக்கும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள்.
சிம்மம்
மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்களின் மூலம் நன்மை உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
கன்னி
தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். .
துலாம்
தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும்.
விருச்சிகம்
வேலையில் கவனம் தேவை. வித்தியாசமான கற்பனை சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். கலை துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும்.
தனுசு
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும்.
மகரம்
வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் புரிதல் உண்டாகும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும்.
கும்பம்
புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும்.
மீனம்
காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். மனவளக்கலையில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். புதிய வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்