Today Rasipalan (08.05.2024):'கவலை மறையும்..தடைகள் குறையும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!
Today Horoscope, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 08) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 08 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்
அடுத்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பொறுமை வேண்டும்.
மிதுனம்
சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டு. நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விவசாய பணிகளில் அனுபவம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும்.
கடகம்
வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.
சிம்மம்
இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். தாயார் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்ப்பு விலகும்.
கன்னி
தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
துலாம்
சுபகாரிய பேச்சுவார்த்தை கைகூடும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
தனுசு
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். . எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவலை மறையும்.
மகரம்
கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்த தன்மை விலகும். பணிபுரியும் இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்