தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (5.5.2024): 'எதிர்பாராதது நடக்கும்'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (5.5.2024): 'எதிர்பாராதது நடக்கும்'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 05, 2024 05:30 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 05) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மே 05 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மே 05 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும்.

ரிஷபம்

ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

கடகம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும்.

சிம்மம்

கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் இருக்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும்.

கன்னி

மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பூர்வீகம் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

துலாம்

ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனை மீதான கடன் உதவி கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் ஏற்படும்.

தனுசு

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மகரம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுகமாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள்.

கும்பம்

எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.

மீனம்

சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்