தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (03.05.2024): 'நிதானம் தேவை..தடங்கல் விலகும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (03.05.2024): 'நிதானம் தேவை..தடங்கல் விலகும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 03, 2024 05:30 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 03) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மே 03ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மே 03ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி உலகில் மதிப்பு உயரும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

புதிய முயற்சிகள் சாதகமாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கிடைக்கும்.

மிதுனம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் செயல்படவும்.

கடகம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி வட்டாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிதானம் தேவை.

சிம்மம்

சோர்வு விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி

விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்

உறவினர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.

விருச்சிகம்

நினைத்த சில காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தடங்கல் விலகும்.

தனுசு

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும்.

கும்பம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சந்தேக உணர்வுகளினால் குழப்பம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகளிடத்தில் அதிக உரிமைகளை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும்.

மீனம்

நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வியாபாரப் போட்டிகளால் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்