தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 31, 2024

Today Rasipalan (31.03.2024): 'மாதத்தின் கடைசி நாள் எப்படி இருக்கும்..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 31, 2024 05:15 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 31ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 31ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று எதிலும் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருடைய உதவிகளால் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நினைத்த பணிகளை எண்ணிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கடகம்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

சிம்மம்

எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களால் மனஅமைதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். அதிரடியான திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

துலாம்

இன்றைய நாளில் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். பேச்சுக்களில் சற்று கவனம் தேவை. வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

விருச்சிகம்

மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமிர்த்தமான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் நிதானத்தை கையாளுவது நல்லது. சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.

மகரம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம் 

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்