தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 30, 2024

Today Rasipalan (30.03.2024): கவலைகள் விலகும்..தன்னம்பிக்கை பிறக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Mar 30, 2024 05:15 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மார்ச் 30) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 30ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 30ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

தொழில் செய்பவர்களுக்கு பொறுமை வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்பாடுகளில் அனுபவத்தை பயன்படுத்துவது நல்லது. எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

ரிஷபம்

சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று கடன் சார்ந்த உதவி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். கவலைகள் குறையும்.

கடகம்

எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

சிம்மம்

நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும்.

கன்னி

சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனதளவில் புதுவிதமான கற்பனை பிறக்கும். வரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

தனுசு

எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கவலைகள் விலகும் நாள்.

மகரம்

மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். .

கும்பம்

சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்