தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 28, 2024

Today Rasipalan (28.03.2024): 'புயலுக்கு பின் அமைதி'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 28, 2024 05:32 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மார்ச் 28) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 28ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 28ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

அலுவலகத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்

மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்னைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்

அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே இன்று திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்கள் முயற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு சாதகமாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து செயல்படுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்

சவாலான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

பேச்சுக்களில் நிதானத்தை தேவை. ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவு நல்லது. குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் /  நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்