தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 26, 2024

Today Rasipalan (26.03.2024): 'எதிர்பாரததும் நடக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 26, 2024 05:27 AM IST

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 26) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 26ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 26ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும்.

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். செலவு நிறைந்த நாள்.

கடகம்

திட்டமிட்ட பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும்.

சிம்மம்

உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கலகலப்பான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். வழக்குகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும்.

தனுசு

நிர்வாக திறமை மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

மகரம்

வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளியூர் வர்த்தகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகளால் மனதில் மாற்றம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்