தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 24, 2024

Today Rasipalan (24.03.2024): 'வரவும் உண்டு செலவும் உண்டு'…மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 24, 2024 05:32 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காணலாம்.
12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். பயணங்களின் மூலம் சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.

கடகம்

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகப் பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.

சிம்மம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

கன்னி

பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கூட்டு தொழிலில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பகை விலகும் நாள்.

விருச்சிகம்

மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த விஷயங்களுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.

தனுசு

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

மகரம்

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும்.

கும்பம்

எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகும். எதிலும் தாழ்வுமனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

மீனம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். இன்பம் நிறைந்த நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்