Today Rasipalan (23.03.2024): இந்த நாள் யாருக்கு சாதகம்?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (23.03.2024): இந்த நாள் யாருக்கு சாதகம்?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (23.03.2024): இந்த நாள் யாருக்கு சாதகம்?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 23, 2024 06:07 AM IST

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா?. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 23) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 23 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 23 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

உங்கள் வருவாயை அதிகரிக்க ஒரு வாய்ப்பைப் பயன்படுத்த உள்ளீர்கள். குடும்பத்தினருடன் சேர்ந்து ஏதாவது திட்டமிடுவது மகிழ்ச்சியாக இருக்கும்.கல்வித்துறையில் நீங்கள் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்

வீண் செலவுகளை நிறுத்துவதால் நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக் கும்.

மிதுனம்

வெளி உணவை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று தொடங்கும் காரியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கடகம்

ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சட்ட சிக்கலில் ஏற்ற, இறக்கம் காணப்படும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம்

நிதி நிலை நிலையானதாக இருக்கும். நீங்கள் சில புதிய யோசனைகளை செயல்படுத்துவதால் வேலையில் சில விஷயங்கள் சாதகமாக மாறும். நீங்கள் ஈடுபடும் முக்கியமான காரியத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்கள் உதவிக்கு வர வாய்ப்புள்ளது. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.

கன்னி

நிதி விஷயங்களில் கவனம் தேவை. பதவி உயர்வுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாழ்க்கைத் துணை உங்கள் மனநிலையைப் பூர்த்தி செய்வதால் குடும்ப வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு பாராட்டு அல்லது மரியாதை கூடும்.

துலாம்

சேமிப்பதும், பின்னர் செலவு செய்வதும் சிறந்தது. பணியிட பிரச்சனைக்கு தீர்வு காண போராடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு சிலருக்கு பிரகாசமாக இருக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் ஊக்கத்து டன் செயல்படுவார்கள்.

தனுசு

இளம் தொழில் செய்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு இடமாற்றத்தை தவிரக்க முடியாது. தொழில்முறை அல்லது கல்வித்துறையில் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். தேவை இல்லாத வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.

கும்பம்

வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. நிதி பலம் சிலருக்கு வலுவாக இருக்கும். புதிய முயற்சிக்கு மதிப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்

ஆரோக்கியம் மேம்படும். அனைத்து தரப்பிலிருந்தும் உங்களுக்கு உதவி கிடைப்பதால் புதிய திட்டம் சுமுகமாக நடக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்