Today Rasipalan (22.03.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 22) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும்.
மேஷம்
திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.
ரிஷபம்
நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும் . உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அனுகூலமான நாள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.
மிதுனம்
மனதளவில் தெளிவு பிறக்கும். உற்சாகமான நாள். வியாபாரம் அமோகமாக நடைபெறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கடகம்
சூழ்நிலை அறிந்து முடிவுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள்.பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். புதிய முயற்சி சாதகமாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கல்விப் பணிகளில் கவனம் வேண்டும்.
கன்னி
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.
துலாம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
விருச்சிகம்
மகிழ்ச்சியான நாள். கணவன்-மனைவி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிலும் முன் யோசனையோடு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும்.
தனுசு
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக் கூடும். வெளியூர் பயண முயற்சிகள் கைகூடிவரும். நன்மை நிறைந்த நாள். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும்.
கும்பம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும்.
புதிய முயற்சிகள் இழுபறியாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்