தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 21, 2024

Today Rasipalan (21.03.2024): 'கவனமாக இருந்தால் எல்லாம் கிடைக்கும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 21, 2024 05:15 AM IST

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 21) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 21 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.
மார்ச் 21 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும்.

ரிஷபம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

மிதுனம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்மறையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும்.

கன்னி

பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு மதிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுப்பது நல்லது. தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.

தனுசு

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

மீனம்

சிலருக்கு இன்று மனதளவில் புதிய சிந்தனை ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். கவனம் தேவை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்