Today Rasipalan (19.03.2024):'பொறுமை அவசியம், சிந்தித்து செயல்படவும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 19) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து
மேஷம்
புதிய முயற்சிகளை தவிர்க்கவும். குழப்பம் விலகும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும்.
ரிஷபம்
இன்று உங்களின் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். முயற்சிகள் எல்லாம் சாதகமாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.
மிதுனம்
எதிர்பாராத சில பணவரவு உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடிக்கவும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
கடகம்
விஐபியின் அறிமுகம் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.நண்பர்களின் மூலம் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய முயற்சிகள் சாதகமாகும்
சிம்மம்
வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.
கன்னி
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானம் தேவை.
துலாம்
மறைமுக எதிர்ப்பு நீங்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
விருச்சிகம்
இன்று பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி நிறைந்த நாள்.
தனுசு
திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். புதுவிதமான வியூகங்களை அறிவீர்கள்.
மகரம்
உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளதுடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
மீனம்
தன்னம்பிக்கை மேலோங்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள்/ நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்