தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 13, 2024

Today Rasipalan (13.03.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 13, 2024 06:34 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 13) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 13ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 13ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

செயல்பாடுகளில் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

கடகம்

ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவலை மறையும் நாள்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

கன்னி

குடும்பத்தில் பொறுப்பு மேம்படும். பல பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

நினைத்த காரியம் நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும்.

விருச்சிகம்

தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும்.

தனுசு

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல் ஏற்படும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். .

மகரம்

வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். .

கும்பம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளில் தெளிவு ஏற்படும். மனதில் இடமாற்றம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.

மீனம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்