தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 11, 2024

Today Rasipalan (11.03.2024): வாரத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 11, 2024 06:27 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய நாள் (மார்ச் 11) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 11ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
மார்ச் 11ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். 

ரிஷபம்

கல்வித் தடைகள் விலகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வணிகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  புகழ் நிறைந்த நாள்.

மிதுனம்

ஆன்மிகம் தொடர்பான பயண வாய்ப்பு கைகூடிவரும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும். எதிர்கால முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். 

கடகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத தேடல் அதிகரிக்கும். நீதித்துறையில் விவேகத்துடன் செயல்படவும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். பயணம் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். 

சிம்மம்

அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கடன் தொடர்பான விஷயங்களால் வருத்தங்கள் நேரிடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். 

கன்னி

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். 

துலாம்

வீடு விற்பனையில் இருந்துவந்த காலதாமதம் விலகும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். நீர்வள மேலாண்மை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறையில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 

தனுசு

திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். புதிய வீடு மற்றும் செல்வ சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

மகரம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். 

கும்பம்

தனவரவுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. 

மீனம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம்விட்டு பேசுவதால் புரிதல் அதிகரிக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில்  குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள்/ நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்