Today Rasipalan (03.03.2024): யாருக்கு திடீர் பணவரவு?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 03) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பொறுமையைக் கடைபிடிக்கவும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டு.
ரிஷபம்
விருப்பம் நிறைவேறும் நாள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போல் இருக்கும்.
மிதுனம்
மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அறிவுரைகளை வழங்குவதை தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் பின்னர் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.
கடகம்
உறவினரி டம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. மூத்தவர்களின் ஆலோசனை பெறுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படு வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு உருவாகும். வெளியாட்களிடம் எந்த தகவலையும் பகிர வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளை முறியடித்து விற்பனையை பெருக்குவீர்கள்.
கன்னி
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
துலாம்
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிநாடுகளில் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.
விருச்சிகம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர்பாராத பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
நண்பர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும்.
மகரம்
எதிலும் முயற்சி வேண்டும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.
கும்பம்
சுபகாரி விஷயங்களில் பொறுமை தேவை. விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மீனம்
பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும்.
டாபிக்ஸ்