Today Rasipalan (02.03.2024): லாபம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 02) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 20, 2025 10:11 AMசுக்கிர ராகு பெயர்ச்சி: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. ராகு பயணத்தில் மீனத்தில் கரம் பிடித்த சுக்கிரன்!
Mar 20, 2025 06:45 AMகுபேர யோகம்: கோடி கோடியாய் கொட்டும் சனி சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. ஃபேவரைட் லிஸ்டில் யார்?
Mar 20, 2025 06:30 AMஇந்த மூன்று ராசிகள் இனி கவலை பட தேவையில்லை.. அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் இருக்கு.. சுக்கிரனின் மாற்றத்தால் யோகம்!
Mar 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஜாக்பாட் உங்களுக்கா.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு.. உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க!
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.
ரிஷபம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தியானம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
கன்னி
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
துலாம்
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும்.
தனுசு
சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும்.
மகரம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கும்பம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
மீனம்
நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

டாபிக்ஸ்