Today Rasipalan (29.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (29.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (29.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 29, 2024 05:35 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 29) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (29.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (29.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

மேஷம்

எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்களின் வழியில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். 

ரிஷபம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். 

மிதுனம்

பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாகம் தொடர்பான துறைகளில் மேன்மை உண்டாகும். 

கடகம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தொழிலில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். 

சிம்மம்

ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபார விஷயங்களில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கன்னி

வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். 

துலாம்

நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். புதிய அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலை துறையில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்களில் கவனம் வேண்டும். 

தனுசு

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் மறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் புதிய வியூகங்களை செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். 

மகரம்

பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். 

கும்பம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். முயற்சி மேம்படும்.

மீனம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் கோபமின்றி செயல்படுவது நல்லது. வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது.  அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்