Today Rasipalan (28.06.2024): இந்த நாள் யாருக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 28) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
மேஷம்
தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
மிதுனம்
தொழில் நிமித்தமாக மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். மனதளவில் இருந்த அமைதியின்மை குறையும். தன வரவுகளை மேம்படுத்துவதற்கான சூழல்கள் அமையும்.
கடகம்
மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
புதுமையான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.
கன்னி
தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும்.
துலாம்
சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் மறையும்.
விருச்சிகம்
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்
சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். பேச்சுகளுக்கு மதிப்புகள் உண்டாகும்.
மீனம்
தொழில் வட்டாரத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்