தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (25.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (25.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 25, 2024 05:48 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 25) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (25.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (25.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

கற்றல் திறனில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்

சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்களால் விரயம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். 

மிதுனம்

மறதியால் செயல்களில் தாமதம் உண்டாகும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். 

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் விலகும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். 

சிம்மம்

இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். தடையாக இருந்தவர்களின் இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள்.  கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் அமையும். 

துலாம்

அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். கடனை அடைப்பதற்கான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் சாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். 

விருச்சிகம்

மனதில் இருந்த கவலைகள் விலகும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். 

தனுசு

தடைப்பட்ட தனவரவுகள் கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். 

மகரம்

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். 

கும்பம்

பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். நண்பர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான விரயங்கள் நேரிடலாம். ரகசியமான முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். 

மீனம்

வரவுகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு மாற்றம் குறித்த செயல்களில் பொறுமை காக்கவும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9