Today Rasipalan (23.06.2024): தடைகள் விலகி கவலை மறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 23) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 20, 2025 06:45 AMகுபேர யோகம்: கோடி கோடியாய் கொட்டும் சனி சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. ஃபேவரைட் லிஸ்டில் யார்?
Mar 20, 2025 06:30 AMஇந்த மூன்று ராசிகள் இனி கவலை பட தேவையில்லை.. அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் இருக்கு.. சுக்கிரனின் மாற்றத்தால் யோகம்!
Mar 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஜாக்பாட் உங்களுக்கா.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு.. உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க!
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் ஒருவிதமான திருப்தி உண்டாகும்.
ரிஷபம்
கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். காயப்படுத்தும் வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.
மிதுனம்
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். துணைவர் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.
கடகம்
உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டக்கால பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில நெருக்கடியான சூழல்கள் தோன்றி மறையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.
கன்னி
புதிய வேலை சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடி வரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கடன் பற்றிய சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கவலை மறையும்.
துலாம்
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். சிறுதூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது நல்லது. .
மகரம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
கும்பம்
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
மீனம்
அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்