தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (22.06.2024): நினைத்தது நடக்குமா ?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (22.06.2024): நினைத்தது நடக்குமா ?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 22, 2024 05:30 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 22) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (22.06.2024): நினைத்தது நடக்குமா ?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (22.06.2024): நினைத்தது நடக்குமா ?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

மேஷம்

உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்

வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும்.

கன்னி

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

துலாம்

நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும்.

தனுசு

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த காரியத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். உணவு விஷயங்களில் கவனம் தேவை.

மகரம்

நினைத்த சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும்.

கும்பம்

மனதில் நினைத்த காரியங்கள் கைக்கூடும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பழைய நண்பர்கள் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

மீனம்

மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்