Today Rasipalan (21.06.2024): யாருக்கு மாற்றம் ஏற்படும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 21) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 23, 2025 12:25 PMமகாலட்சுமி யோகம் : திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் டும்டும்.. இந்த 3 ராசிக்கும் அதிர்ஷ்டம்.. பண பிரச்சனை இருக்காது!
Mar 23, 2025 07:00 AMகர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
Mar 23, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சி தேடி வரும்.. அதிர்ஷ்டம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டிது யார்.. உங்க பலன் எப்படி இருக்கும்
Mar 22, 2025 07:15 PMசெவ்வாய் - சந்திரன் சேர்க்கை.. ஏப்ரலில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!
Mar 22, 2025 04:57 PMசைத்ரா நவராத்திரி 2025: அன்னை துர்கா தேவியின் அருள் யாருக்கு?.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் பாருங்க..!
Mar 22, 2025 04:34 PMசுக்கிர பலன்கள்: சுக்கிரன் செல்வ கண்கள் திறந்துவிட்டார்.. கோடிகள் கொட்டப் போகும் ராசிகள்.. யாருக்கு யோகம்?
மேஷம்
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் தெளிவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும்.
மிதுனம்
மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்.
கடகம்
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும்.
கன்னி
அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும்.
துலாம்
கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும்.
விருச்சிகம்
பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். முதலீடு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும்.
மகரம்
தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும்.
கும்பம்
குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு குறித்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
மீனம்
உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்