தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (17.06.2024): 'காத்திருப்பு வீண் போகாது'..இந்த நாள் எப்படி இருக்கும்? - உங்களுக்கான ராசிபலன்கள் இதோ..!

Today Rasipalan (17.06.2024): 'காத்திருப்பு வீண் போகாது'..இந்த நாள் எப்படி இருக்கும்? - உங்களுக்கான ராசிபலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 17, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 17) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (17.06.2024): 'காத்திருப்பு வீண் போகாது'..இந்த நாள் எப்படி இருக்கும்? - உங்களுக்கான ராசிபலன்கள் இதோ..!
Today Rasipalan (17.06.2024): 'காத்திருப்பு வீண் போகாது'..இந்த நாள் எப்படி இருக்கும்? - உங்களுக்கான ராசிபலன்கள் இதோ..!

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தொட்ட காரியங்கள் சாதகமாக முடியும்.

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மேல்நிலைக் கல்வி குறித்த எண்ணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான சூழல் அமையும்.

கடகம்

வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும்.

சிம்மம்

சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும்.

துலாம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வாக்குறுதி அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.

தனுசு

இழுபறியாக இருந்துவந்த முயற்சி நிறைவேறும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்

தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராதவிதமாக திடீர் பண வரவு ஏற்படும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிகளில் சில அனுபவங்கள் கிடைக்கும்.

கும்பம்

மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கவனம் தேவை. தடைபட்ட பணிகள் சுமூகமாக முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்துவந்த வருத்தம் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். இழுபறியான சில பணிகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9