Today Rasipalan (13.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (13.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (13.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jun 13, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 13) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (13.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (13.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிக்கமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் சிலருக்கு கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் .

மிதுனம்

உத்தியோகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

கடகம்

மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பலவிதமான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.

கன்னி

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

தனுசு

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணி நிமித்தமான ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.

மகரம்

நிர்வாகத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும்.

கும்பம்

வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். சிக்கலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயமான சூழ்நிலை ஏற்படும். அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்