தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (12.06.2024): 'யாருக்கு நல்ல லாபம் கிடைக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (12.06.2024): 'யாருக்கு நல்ல லாபம் கிடைக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 12, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 12) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (12.06.2024): 'யாருக்கு நல்ல லாபம் கிடைக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (12.06.2024): 'யாருக்கு நல்ல லாபம் கிடைக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். கவனம் வேண்டும்.

ரிஷபம்

கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிக்கல் மறையும்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல்களால் ஏற்பட்ட தடைகள் விலகும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் சில பணிகளை முடிப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்

இழுபறியாக இருந்துவந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

கன்னி

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சற்று கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.

விருச்சிகம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். செயல்களில் அணுகுமுறைகளால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள்.

தனுசு

புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

மகரம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டும்.

கும்பம்

புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். கவலை மறையும்.

மீனம்

காரிய அனுகூலம் உண்டாகும். வழக்கு பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மையை ஏற்படுத்தும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்