தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (11.06.2024): 'கவலைகள் மறையும்'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (11.06.2024): 'கவலைகள் மறையும்'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jun 11, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 11) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (11.06.2024): 'கவலைகள் மறையும்'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (11.06.2024): 'கவலைகள் மறையும்'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வாகன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். 

ரிஷபம்

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சகோதரர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சக வியாபாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

சந்தேக உணர்வுகளால் குழப்பம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போது மிதவேகம் நன்மையை தரும். உடனிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்.

கன்னி

உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் விரைவில் நடக்கும். வியாபார பணிகளில் செழிப்பான சூழல் உண்டாகும்.

துலாம்

சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். 

விருச்சிகம்

வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பகை மறையும்.

தனுசு

மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கனிவான அணுகுமுறைகள் வியாபாரத்தில் மாற்றத்தை உண்டாக்கும்.

மகரம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபார நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றங்கள் மறையும்.

கும்பம்

தனவரவுகள் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் சில தெளிவுகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் முன்னுரிமை ஏற்படும். உடலிலும், மனதிலும் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி உற்சாகம் உண்டாகும்.

மீனம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சிக்கனமான செயல்பாடுகள் நெருக்கடிகளை தவிர்க்கும். இறை சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். அரசு விவகாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் அமையும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்