Today Rasipalan (10.06.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி ?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 10) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
மேஷம்
மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். தாய் வழி உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
ரிஷபம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுக தடைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்பு குறித்த சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
மிதுனம்
பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்குள் அனுசரித்து நடந்து கொள்ளவும். தந்தை வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். இறை பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் கருத்துகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் அமையும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் சில புதிய அனுபவம் உண்டாகும்.
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். சகோதரர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஜாமின் விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த பணிகளில் சில தடைகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
கன்னி
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கை துணையினால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சகோதரர்களின் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும்.
துலாம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவுகளிடத்தில் மனம் விட்டு பேசுவது நல்லது. வியாபாரத்தில் சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நிர்வாக துறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.
விருச்சிகம்
விவசாயம் சார்ந்த செயல்களில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உறவினர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் மேம்படும். கருத்துகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
மகரம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் நன்மை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும்.
கும்பம்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவுகள் அதிகரிக்கும். சில புதிய வாய்ப்புகளால் மாற்றங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.
மீனம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக விஷயங்களில் சில தெளிவுகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்