Today Rasipalan (8.6.2024): யாருக்கு உயர்வு கிடைக்கும்?.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 08) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
Apr 23, 2025 05:00 AM'மகிழ்ச்சியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. யார் கவனமாக இருக்க வேண்டும்'ஏப்.23, 2025 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
மேஷம்
அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மிதுனம்
எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.
கடகம்
பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மேல் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும்.
சிம்மம்
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில செலவுகளால் மனசஞ்சலம் ஏற்படும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
துலாம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விருச்சிகம்
மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும்.
தனுசு
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும்.
மகரம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.
கும்பம்
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். துரிதமின்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
மீனம்
பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்