தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (06.06.2024): ‘தொட்டது துலங்கும் விட்டது கிடைக்கும்’..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (06.06.2024): ‘தொட்டது துலங்கும் விட்டது கிடைக்கும்’..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 06, 2024 05:15 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 06) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (06.06.2024): ‘தொட்டது துலங்கும்.. விட்டது கிடைக்கும்’.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (06.06.2024): ‘தொட்டது துலங்கும்.. விட்டது கிடைக்கும்’.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

மேஷம்

செல்வாக்கு உயரும். அரசு துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வேலையாட்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறையில் முயற்சிகள் சாதகமாக அமையும். பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். இனம் புரியாத சில எண்ணங்களின் மூலம் தடுமாற்றம் உண்டாகும்.

கடகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். வாகனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும்.

சிம்மம்

வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி

தாயாரின் உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். தம்பதிகளுக்கு புரிதல் ஏற்படும். கல்வியில் புதிய தேடல் உண்டாகும். வெளிநாடு செல்வது தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டும்.

துலாம்

முக்கியமான விஷயங்களில் பொறுமை தேவை. உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். முயற்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்

எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையதள பயன்பாடு கல்வியில் அதிகரிக்கும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

மனைவியிடம் அனுசரித்துச் செல்லவும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

மீனம்

வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தாய் வழி உறவுகளால் ஆறுதல் ஏற்படும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மேம்படும். காலம் தவறாமல் உணவு உட்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்