தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (05.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (05.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 05, 2024 05:52 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 05) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (05.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (05.06.2024): இன்று எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

அலுவலகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். 

ரிஷபம்

அலுவலகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சில விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். பகை விலகும்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறைமுகமான சில தடைகள் மூலம் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். பணியிடங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். 

சிம்மம்

வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். 

கன்னி

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வெளியூர் சார்ந்த வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். 

துலாம்

மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிலும் பொறுமை வேண்டும். 

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் சற்று குறையும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தடைகள் விலகும். தெளிவு மேம்படும்.

தனுசு

நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

மகரம்

 எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாக அமையும். பழைய விவகாரங்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். முயற்சி மேம்படும்.

கும்பம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். பணி விஷயங்களில் சற்று கவனம் தேவை. சங்கடங்கள் விலகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். 

மீனம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  தொழில் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். நெருக்கடிகள் மறையும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்