Today Rasipalan (04.06.2024):'புதிய விடியல் காத்திருக்கு'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 04 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 04) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். குழப்பம் மறையும் நாள்.
ரிஷபம்
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். பூர்வீக விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்பு குறையும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
மிதுனம்
மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள்.
கடகம்
மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
சிம்மம்
வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.
கன்னி
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளியிடங்களில் பொறுமையுடன் செயல்படவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்
துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்
பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
தனுசு
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.
மகரம்
பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். உறவுகளின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
மீனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்