தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (03.06.2024): இன்று உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (03.06.2024): இன்று உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 03, 2024 05:24 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 03) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (03.06.2024): இன்று உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (03.06.2024): இன்று உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

மேஷம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும்.

ரிஷபம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுப காரிய தடைகள் விலகும்.

மிதுனம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட சில கடன் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

கடகம்

உறவுகளின் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்பு குறையும்.

சிம்மம்

உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களால் சில மாற்றமான தருணம் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

கன்னி

மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமித்தமான விஷயங்களை பகிராமல் இருக்கவும்.

துலாம்

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டாரம் விரிவடையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்பு குறையும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும்.

மகரம்

வியாபார ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

கும்பம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் மேம்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும்.

மீனம்

வெளிப் பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்