Today Rasipalan (01.06.2024): இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 1) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவு, செலவில் விவேகத்துடன் செயல்படவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.
மிதுனம்
அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பொருட்களின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கடகம்
முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில்நுட்ப தேடல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். புதிய அனுபவம் ஏற்படும்.
சிம்மம்
மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். உடன் பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான பேச்சுக்களால் சில மாற்றங்கள் ஏற்படும்.
கன்னி
சகோதரர்களின் வழியில் உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வேலை திடீரென முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெற்றி கிடைக்கும்.
துலாம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும்.
விருச்சிகம்
குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பெரியோர்களின் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பொறுமை வேண்டும்.
தனுசு
புதிய வேலைக்கான உதவிகள் கிடைக்கும். புதிய மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
மகரம்
காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும்.
கும்பம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.
மீனம்
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்