Today Rasipalan (17.07.2024): நினைத்தது நடக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 17) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
மேஷம்
செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களால் விரயம் உண்டாகும். ஏற்ற, இறக்கமான நாள்.
ரிஷபம்
பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கடகம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தடைகள் மறையும் நாள்.
சிம்மம்
கடன் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணத்தில் மிதவேகம் நல்லது. கூட்டு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும்.
கன்னி
சொத்து விற்பது, வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள்.
துலாம்
வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.
விருச்சிகம்
தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவணம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.
தனுசு
தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும்.
கும்பம்
கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்
வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்