Today Rasipalan (11.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (11.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan (11.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jul 11, 2024 05:00 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 11) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (11.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan (11.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

மேஷம்

சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

ரிஷபம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். சக பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தாயிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும்.

சிம்மம்

வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கன்னி

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான குழப்பம் உண்டாகும்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பம் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும்.

தனுசு

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிறுதூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

மகரம்

தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்

சுப காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரத்தில் புரிதல் உண்டாகும். போட்டி செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. லாபம் நிறைந்த நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்