Today Rasipalan (08.07.2024): குழப்பங்கள் குறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (08.07.2024): குழப்பங்கள் குறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (08.07.2024): குழப்பங்கள் குறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jul 08, 2024 05:41 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 08) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (08.07.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (08.07.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

உத்தியோகப் பணிகளில் கவனம் தேவை. அடுத்தவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பான பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உழைப்பு மேம்படும்.

மிதுனம்

வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் தனிபட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் சுமாராக நடைபெறும்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். நம்பிக்கையை மேம்படுத்தும்.

கன்னி

எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். முயற்சிகளில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

துலாம்

அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் கைகூடும். அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும்.

விருச்சிகம்

எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

தனுசு

வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.

மகரம்

சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். ஆன்மிக பணிகளில் புரிதல் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9